எனது மின்னூல்கள்

Friday, 30 August 2019

எனது நூல்கள்அச்சிடப்பெற்ற எனது நூல்களை வாங்க, தொடர்பு கொள்க:

             94422 06051     (அ)   sabavadivelu@gmail.com


இவை தவிர்த்து, எனது மின்னூல்களைப் பெற :    சபா வடிவேலு , மின்னூல்கள்


Tuesday, 18 September 2018

முச்சந்தி முரசு - 20  காதுகளுக்குப்  பாட்டு
  கைகளுக்கு விளையாட்டு
  கல்விக்கோ பூட்டு


முச்சந்தி முரசு - 19 துண்டிக்க விரும்பா தொடர்பு:

அரை நொடிக்கொருதரம் புதுப்பிப்பு

அரட்டையர் குழுவில் அங்கலாய்ப்பு

அவ்வப்போது வேலையின் நினைப்பு

Wednesday, 12 September 2018

முச்சந்தி முரசு - 18  மவுனப் புரட்சி

  பேரவையில் பல்லோர்
  பெருவிவாத சர்ச்சைகள்
  இல்லையொரு பேச்சு
  இணைய வழியாச்சு

முச்சந்தி முரசு - 17வரிதோறும் வரி

வழிக்கு வருவார்களோ
வலைதளப் பதிவர்கள்
வரிக்கு வரி வரி விதித்திட்டால்?

முச்சந்தி முரசு - 16

அகிலமே அமைதி!

அமைதி அமைதி
ஆழ்ந்த மூழ்கிப்பு
அவரவர் கைத்திரையில்

Friday, 30 March 2018

முச்சந்தி முரசு - 15
காவிரிக் கொடை:

காவிரி ஓடினால் கழனியெல்லாம் செழிக்கும்
காவிரி வாடினால் மணற்கொள்ளை கொழிக்கும்
காவிரி ஓடினும் வாடினும் ஊடகம் தழைக்கும்


முச்சந்தி முரசு - 14
ஆண்டி ஆக்கினீரே:

பழம் கேட்டேன் மறுத்தீர்கள்
பாஷாணம் ஏற்றேன் சுரண்டினீர்கள்
பசும்பொன் கொண்டேன் திருடினீர்கள்
பழநி மலைபோதும், விட்டுவைப்பீர்!

எதற்கு , எதற்கு ?

அறிவனுக்கு எதற்கு ஞானப் பழம் ?
ஆண்டிக்கு எதற்கு நவ பாஷாணம் ?
அழகனுக்கு எதற்கு ஐம்பொன் ?
அதனால் எல்லாம் எமக்கே!

முச்சந்தி முரசு - 13கண்டேன், காவிரி கரைதனிலே:

வீதிதோறும் கோயில் கண்டேன்
கோயில்தோறும் குளம் கண்டேன்
குளம்தோறும் தரையையே கண்டேன்

குடந்தை உலா:

நளனின் குளம் நள்ளாரில் நலியுது
இராகுவின் தீர்த்தம் தீர்ந்தே போனது
உப்பிலியின் குளம் உலர்ந்து உறைகிறது
வாஞ்சியின் குளம் வரண்டு வாழ்கிறது
வருணா வஞ்சனை ஏனோ?

முச்சந்தி முரசு - 12உலகப் பந்து:

பந்தைச் சிதைத்துப் பலத்தை வீழ்த்துவோம்
பார்ப்பவர் காதில் பூவைச் சுற்றுவோம்
பன்னாட்டு விளையாட்டைப் பரிகாசம் பண்ணுவோம்

முச்சந்தி முரசு - 11அறிவுலக அடிமைகள்:

பகல் இரவு எனும் பாகுபாடு எதற்கு
பசி தூக்கம் எனும் உணர்வு எதற்கு
பல்லடுக்கு மாளிகையில் பணிபுரிவோமே
பன்னாட்டு முதலைக்கு அடிமைசெய்வோமே!

உறங்குவதற்கு அல்ல இரவுகள்
உண்பதற்கு அல்ல உணவுகள்
ஊதியம் ஒன்றே கனவுகள்
உலகம் இணைக்கும் அடிமைகள்!

Saturday, 10 March 2018

முச்சந்தி முரசு - 10


மூவுலக சஞ்சாரி:

பொய்கள் கூடிப் போட்டன மாநாடு

பொழுது புலர்ந்ததும் ஊரெல்லாம் சுற்றிவர

பொருத்தமாய்க் கிடைத்ததே முகநூல் வாகனம்