எனது மின்னூல்கள்

Wednesday, 22 February 2017
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை   


 (குறள்: 534  -அதிகாரம்:  பொச்சாவாமை)

Tuesday, 21 February 2017அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்                                                                            (குறள்: 298 – வாய்மை)


குறள்தரும் குறுமொழி
            தமிழில் முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்ட குறள் வெண்பாதான் மிகச் சுருங்கிய வடிவில் அமைந்த பாடல் வகையாகும் (நூற்பா எனும் சூத்திர யாப்புக்கு அடுத்ததாக என்பர்). "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்எனும் ஒளவை வாக்கிலிருந்து வள்ளுவரின் சொற்சிக்கனத்தையும், பொருட் செறிவையும் எளிதேயுணரலாம். இத்தன்மைத்த குறட்பாக்களுள்ளும் ஊடூடே 'அணுவிற்கு அணுவாய்' அமைந்த குறுமொழிகளைக் காணலாம் என்பதை எடுத்துக் காட்டவே இம்முயற்சி .
              படிப்போர் உள்ளத்தில் பளீரென ஊடுருவி நினைவில் உறைய வைப்பவை இக்குறுமொழிகளாகும். குறள்தரும் குறுமொழிகளைப் பயில்பவர் திருக்குறளை முற்றும் பயில ஊக்கம் பெறுவர் என்பது திண்ணம்.
            ஒரு குறட்பாவின் ஏழு சீர்களும் சேர்ந்த தொகுதி தரும் குறள்நெறி தவிர்த்து, அதனுள்ளும் ஒரு பகுதியாக மூன்று அல்லது நான்கு சீர்கள் மட்டுமே தனித்ததொரு கருத்துடனோ அல்லது அக்குறளின் மொத்தக் கருத்தின் சாயலாகவோ வருவதுண்டு. இதனையேகுறள்தரும் குறுமொழிஎன ஈங்குக் குறிப்பிடுகிறேன்.
              ஒரே குறளில் இரு குறுமொழிகள் வருவதுண்டு; ஒரே குறுமொழி இரு குறள்களில் வருவதுமுண்டு. குறுமொழி தராக் குறள்களுமுண்டு.

            இன்று முதல் நாடோறும் ஒன்றென, குறள் தரும் குறுமொழிகளைப் பகிர விழைகிறேன்.