எனது மின்னூல்கள்

Sunday 25 July 2021

தமிழ் எனும் அமுதம்


(அமுதே தமிழே திரைப்படப் பாடல் மெட்டு)

 

திருவே, தகையே, திறமிகு மொழியே,
செந்தமிழே

தினம் தினம் புதுமைகள் தா

திகட்டாச் சுவைதனில் வா

தமிழே உலகை நீ யாளு          (திருவே தகையே....)

 

ஒன்றல்ல இரண்டல்ல 

சிலவல்ல செல்வங்கள்

 

இலக்கியங்கள் வளம் குவித்தாய்

இலக்கணங்கள் விதி வகுத்தாய்

நின் இயலும் இசையும் கூத்தும்

இவை கலந்தால் குறைதான்  ஏது

அந்த இறையே உனை வாழ்த்த

தமிழே உலகை நீ யாளு                (திருவே, தகையே....)


நாவில் சனி

 

  

சங்கடம் தருவதும் நீயே

சங்கடம் தீர்ப்பதும் நீயே

அண்மையில் நின் குடியிருப்போ

அலட் டுவார் அவர்தம் நாவினிலோ

ஆண்டவனை நிந்திக்கும் அரசியலார் 

கோவிலை நிந்திக்கும் கூத்தர்

 மதத்தை நிந்திக்கும் மதகுருமார் என 

அவரொடு அண்ணித்திருப்பது நீயன்றோ

நாவில் சனி நல்லோர்க் கில்லை

நாளும் தூற்றுவார் சொல்லில் புகுவாய்

நாட்டோர் கொதிக்க அடிபணித்திடுவாய்

நலமோ ? தீதோ ? நானறியேனே!