எனது மின்னூல்கள்

Thursday, 16 April 2015

“மொழிசார் சிந்தனைகள்”


மொழிசார் சிந்தனைகள்முனைவர் பொற்கோ எழுதியுள்ள இந்நூலை இன்று படித்துமுடித்தேன். பன்னிரு கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ள இச்சிறு நூல் தமிழ் ஆர்வலர்களுக்குப் பயன்தர வல்லது.
பாரதியின் மொழிக் கொள்கை” , “கண்ணன் பாட்டில் பாரதியின் மொழித்திறன்”, “தெருக்கூத்து மொழிநடை”, “மொழிபெயர்ப்பு”, “சொல்லியல்முதலாய கட்டுரைகள் அருமை என்பேன். “தனக்கென்று தனியே பொருள் உடையதாய் விகுதிகளையும் சொல்லுருபுகளையும் ஒட்டுகளையும் ஏற்க வல்லதாய் மொழியில் தன்னிச்சையாக இயங்குகின்ற ஒன்று எதுவோ அதனைச் சொல் என்று கொள்ளலாம்”  என்னேயொரு துலக்கமான வரையரை !
பெயர்த்திரிபு வடிவங்களையும் (casal forms) வினைத்திரிபு வடிவங்களையும் (conjucated forms) அகராதி தனித்தனியே குறிப்பிடுவதில்லை. தமிழ்-தெலுங்கு , தமிழ்-மலையாளம், தமிழ்-கன்னடம் போன்ற இருமொழி அகராதிகள் இல்லை”. இவை நம் நெடுநாள் ஏக்கத்தை வெளிப்படுத்தும் கருத்துகளன்றோ? இத்தகு மொழிசார் சிந்தனைகள் மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழ் வளர்ச்சி நிறுவன நிர்வாகிகள் போன்றோரிடை செழித்து வளரவேண்டும்.