கிடைத்தற்கரிய பொன்மொழிகள் தமிழில் பரவிக்கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்க விழைகிறீர்களா? இதைச் சொடுக்குங்கள் (கோப்பைப் பதிவிறக்கம் செய்தபின் படித்தால் தெளிவாய்க் காணலாம்)
தமிழின் வனப்பும் வளமையும் உலகோர் அறிய புதுமை படைப்போம் - புதுக்கவிதைகள் சமைப்போம் - நட்பு வட்டம் தமிழ் சுவைக்க நாளும் முனைவோம் -
Tuesday, 11 July 2017
Thursday, 4 May 2017
எனது இற்றைநாள் கவிதைகளைப் படித்து மகிழ இதைச் சொடுக்கவும் : (கோப்பை பதிவிறக்கம் செய்தபின் படித்தால் தெளிவாய்க் காணலாம்)
Friday, 3 March 2017
Tuesday, 21 February 2017
“குறள்தரும் குறுமொழி”
தமிழில் முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்ட குறள் வெண்பாதான் மிகச் சுருங்கிய வடிவில் அமைந்த பாடல் வகையாகும் (நூற்பா எனும் சூத்திர யாப்புக்கு அடுத்ததாக என்பர்). "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” எனும் ஒளவை வாக்கிலிருந்து வள்ளுவரின் சொற்சிக்கனத்தையும், பொருட் செறிவையும் எளிதேயுணரலாம். இத்தன்மைத்த குறட்பாக்களுள்ளும் ஊடூடே 'அணுவிற்கு அணுவாய்' அமைந்த குறுமொழிகளைக் காணலாம் என்பதை எடுத்துக் காட்டவே இம்முயற்சி .
படிப்போர் உள்ளத்தில் பளீரென ஊடுருவி நினைவில் உறைய வைப்பவை இக்குறுமொழிகளாகும். குறள்தரும் குறுமொழிகளைப் பயில்பவர் திருக்குறளை முற்றும் பயில ஊக்கம் பெறுவர் என்பது திண்ணம்.
ஒரு
குறட்பாவின் ஏழு சீர்களும் சேர்ந்த தொகுதி தரும் குறள்நெறி தவிர்த்து, அதனுள்ளும் ஒரு பகுதியாக மூன்று அல்லது நான்கு சீர்கள் மட்டுமே தனித்ததொரு கருத்துடனோ அல்லது அக்குறளின் மொத்தக் கருத்தின் சாயலாகவோ வருவதுண்டு. இதனையே “குறள்தரும் குறுமொழி” என ஈங்குக் குறிப்பிடுகிறேன்.
ஒரே குறளில் இரு குறுமொழிகள் வருவதுண்டு; ஒரே குறுமொழி இரு குறள்களில் வருவதுமுண்டு. குறுமொழி தராக் குறள்களுமுண்டு.
இன்று
முதல் நாடோறும் ஒன்றென, குறள் தரும் குறுமொழிகளைப் பகிர விழைகிறேன்.
Tuesday, 31 January 2017
பயில்வோர்ப் பட்டுண்டு உலகம்
கல்வியை விற்றுக் கறைக்காசு குவித்த குபேரர்கள்
கூட்டமாய் அடைபடட்டும்
கற்கையில் களம்புகுந்து அறப் போராடியோர்
காலத்தே வெளிவரட்டும்
வித்தகம் உடையோர் விலைபோவாராயின்
கொட்டடியில் அடைபடட்டும்
சுத்தமனத்தோர் சுயத்தொடு வினைபுரிந்தோர்
வீதிதோறும் வெளிவரட்டும்
எத்தித் தின்போர் எதற்கும் துணிவோர் எளிதில்
வாராது அடைபடட்டும்
நித்தியச் சோற்றிற்கு நிரந்தரம் இல்லாதோரெலாம்
நீதியுற வெளிவரட்டும்
கோடிகள் குவித்து கொட்டமடிப்போர் குறிவைத்தே
கூண்டொடு அடைபடட்டும்
வாடிவதையுறுவோர் வளமொடு வாழ வழிகாட்டுவோர்
விரைந்து வெளிவரட்டும்
தவமென தாமே தனிவழி கண்டு மரபுரிமை முயல்வோர்
முற்றாய் வெளிவரட்டும்
பனியில் உறைந்து வெயிலில் உலர்ந்த அறப்போராளர்
நலமே வெளிவரட்டும்
கள்ள நோக்குடன் கமுக்கச் சதிராடுவோர் கடையரென சடுதியில் அடைபடட்டும்
உள்ள சுத்தியொடு ஊருரிமைக்கு உழைக்கும் உத்தமர்
உடனே வெளிவரட்டும்
படித்தவர் பொதுவெளி புகுதலும் பண்பாடே யென்போர்
பரந்து வெளிவரட்டும்
அடுத்தவர் வெற்றி அபகரிக்கத் துடிக்கும் அரசியல் நரிகள்
அன்றே அடைபடட்டும்
அறமொடு மறம் கரந்து அந்நியர் போற்றும் அறிவிலிகள்
அட்டியின்றி அடைபடட்டும்
தடியெடுத்தோர் எல்லாம் தண்டல்நாயகராய் எண்ணின்
தவறாதே அடைபடட்டும்
தடியடியே தனக்குவப்பாய்ப் பயிரைமேய்ந்த வேலிகளும்
படிப்பினையாய் அடைபடட்டுமே!
Thursday, 1 September 2016
கார்மேகம் வான
வீதியில் ஊர்வலம் கண்டதும்
இடி முழக்கி
மின்னல் வெட்டி மிரட்டியதுவும்
அம்மாவைக் கட்டியே
அர்ச்சுனா என்றதுவும்
மழையெனும் மாயம்
மறுபடியும் நிகழ்ந்ததுவும்
குளம் குட்டையெல்லாம்
நிறைந்து தளும்பியதுவும்
குஞ்சு மீன்கள்
ஆங்கே உயிர்த்து விளையாடியதுவும்
கூட்டங் கூட்டமாய்க்
கொக்குகள் குவிந்ததுவும்
குள்ளப் பசுவதுவும்
கொட்டிலில் ஈன்றதுவும்
கொல்லையில்
ரோசா பூத்துச் சிரித்ததுவும்
குலை தள்ளிய
வாழையை வியந்து மகிழ்ந்ததுவும்
கோயில் கொடியேறி
கொண்டாட்டம் துவங்கியதுவும்
ஒன்று விடாது
உரைக்கும் மடலதுவாம்
நன்று நம்மிடைப்
பழகிய மரபதுவாம்
இன்று கடிதக்
கலையதுவும் கரைந்து மறைந்ததுவே
குறுஞ் செய்தி
மின்னஞ்சல் குறுக்கினவோ
குழுக்கள் கூட்டும்
இணையந்தான் விரட்டியதோ
விரைந்து செல்லும்
இளையோர்காள் கேளீர் !
கலை நயமாம்
மடல் பல வரைதல்
கடுகுச் செய்தியும்
களிப்பை யூட்டும்
கற்பனை ஊறியே
உள்ளம் உவக்கும்
கைவிடாதீர்
கவின் தமிழில் கடிதம் வரைதல் !
( உலக கடிதம் எழுதும் தினம்
– செப்டெம்பர் 1)
Tuesday, 9 August 2016
நெஞ்சு பொறுக்குதில்லையே -
காமத்தில் வெந்தக் காமுகனைக்
கணத்தில் கருக்கினாய் சரியே!
கள்ளமிலாச் சிறுமியைச் சிதைத்தல் அறமோ?
களங்கமுற்றாய்த் தீயே நீயும் ஓர் ஆணாய்!
(30.7.16 அன்று விழுப்புரத்தில் 32 வயது வெறியன்
ஒருதலைக் காதல் கொண்டு 17 வயது சிறுமியைத் தீயிட்டுக் கொன்ற கொடுமை)
காரிருள் போர்வையில் காமக்கயமை வெறியாட
கழிசடை இருவரும் காட்டுப் பன்றிகளாயினரே
ஒருவர் அழுக்கில் ஒருவர் கூடிடவும்
ஒப்பக் கூசாதோ வேசை உறுப்பிற்கும்
கழிப்பவளைக் களித்தீர் புதரிடை மாய்த்தீர்
கூறக்கூசிடும் கொடுமைதான் புரிந்தீர்
கொடும்பழி கொண்டீர் வாழுரிமை இழந்தீர்
அற்று விழட்டும் உம் ஆண் எனும் அடையாளம்
(31.7.16 அன்று தஞ்சை ,சாலியமங்கலம் நிகழ்வு)
Saturday, 16 July 2016
புதிய தலைமுறை தொலைக் காட்சியில் 15/7/2016 அன்று மாலை 4.30 மணிக்கு "கற்க கசடற" நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தொலைநிலைக் கல்வி பற்றி நான் பேசியுள்ளதைக் காண இதைச் சொடுக்கவும் :
Sunday, 3 July 2016
நூல்கள் நம் உற்ற தோழர்கள். தமிழ் இலக்கிய ஈர்ப்பினால் . நான் வாங்கி, படித்து முடித்த தமிழ் நூல்களைப் பட்டியலிட்டுள்ளேன். அவற்றைக் காண விழையின் இதைச் சொடுக்கவும் :
Friday, 1 July 2016
பல தலைப்புகளில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் இதைச் சொடுக்கவும் ; (கோப்பை பதிவிறக்கம் செய்தபின் படித்தால் தெளிவாய்க் காணலாம்)
Thursday, 30 June 2016
நான் படித்த நூல்களைப் பற்றிய எனது விமரிசனங்களைக் காண இதைச் சொடுக்கவும். (கோப்பை பதிவிறக்கம் செய்தபின் படித்தால் தெளிவாய்க் காணலாம்)
Monday, 30 May 2016
யாரிடம் போராட?
நிலப்பரப்பில்
எங்கோவொரு நீர்ப்பரப்பு இங்கேயாம்
நீர்ப்பரப்பில்
ஆங்காங்கே நிலப்பரப்பு அங்கேயாம்
இயற்கைக் கொடையில்
இத்தனை அநீதியா?
சமநீதி கோரி
யாரிடம் போராட?
சூல்கொண்ட மேகங்களே
மறித்து நிற்கும்
மலையைத் தாண்டி
மறுபுறமும் பொழிவாய்
மழையை
நிலத்தில் நீதி
நாட்டிடுவாய்
(அண்மையில் கேரளம் சுற்றிவந்தபின் மனதில் தோன்றியது)
Subscribe to:
Posts (Atom)





