சிறுமைகளுக்கு நாணாதார் சமுதாயத்தின் புற்று எனலாம். இதைப்பற்றிய எனது கட்டுரை ஒன்றினைப் படிக்க இதைச் சொடுக்கவும் ; பதிவிறக்கம் செய்து படிக்கவும். கட்டுரைப்பற்றிய தங்கள் கருத்துக்களை அங்கேயே பதிவிடலாம்.
தமிழின் வனப்பும் வளமையும் உலகோர் அறிய புதுமை படைப்போம் - புதுக்கவிதைகள் சமைப்போம் - நட்பு வட்டம் தமிழ் சுவைக்க நாளும் முனைவோம் -
Wednesday, 19 July 2017
நாணாமை - குறுங் கட்டுரை
சிறுமைகளுக்கு நாணாதார் சமுதாயத்தின் புற்று எனலாம். இதைப்பற்றிய எனது கட்டுரை ஒன்றினைப் படிக்க இதைச் சொடுக்கவும் ; பதிவிறக்கம் செய்து படிக்கவும். கட்டுரைப்பற்றிய தங்கள் கருத்துக்களை அங்கேயே பதிவிடலாம்.
Tuesday, 11 July 2017
கிடைத்தற்கரிய பொன்மொழிகள் தமிழில் பரவிக்கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்க விழைகிறீர்களா? இதைச் சொடுக்குங்கள் (கோப்பைப் பதிவிறக்கம் செய்தபின் படித்தால் தெளிவாய்க் காணலாம்)
Thursday, 4 May 2017
எனது இற்றைநாள் கவிதைகளைப் படித்து மகிழ இதைச் சொடுக்கவும் :  (கோப்பை  பதிவிறக்கம் செய்தபின் படித்தால் தெளிவாய்க் காணலாம்) 
Friday, 3 March 2017
Tuesday, 21 February 2017
“குறள்தரும் குறுமொழி”
            தமிழில் முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்ட குறள் வெண்பாதான் மிகச் சுருங்கிய வடிவில் அமைந்த பாடல் வகையாகும் (நூற்பா எனும் சூத்திர யாப்புக்கு அடுத்ததாக என்பர்). "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” எனும் ஒளவை வாக்கிலிருந்து வள்ளுவரின் சொற்சிக்கனத்தையும், பொருட் செறிவையும் எளிதேயுணரலாம். இத்தன்மைத்த குறட்பாக்களுள்ளும் ஊடூடே 'அணுவிற்கு அணுவாய்' அமைந்த குறுமொழிகளைக் காணலாம் என்பதை எடுத்துக் காட்டவே இம்முயற்சி . 
              படிப்போர் உள்ளத்தில் பளீரென ஊடுருவி நினைவில் உறைய வைப்பவை இக்குறுமொழிகளாகும். குறள்தரும் குறுமொழிகளைப் பயில்பவர் திருக்குறளை முற்றும் பயில ஊக்கம் பெறுவர் என்பது திண்ணம்.
            ஒரு
குறட்பாவின் ஏழு சீர்களும் சேர்ந்த தொகுதி தரும் குறள்நெறி தவிர்த்து, அதனுள்ளும் ஒரு பகுதியாக மூன்று அல்லது நான்கு சீர்கள் மட்டுமே தனித்ததொரு கருத்துடனோ அல்லது அக்குறளின் மொத்தக் கருத்தின் சாயலாகவோ வருவதுண்டு. இதனையே “குறள்தரும் குறுமொழி” என ஈங்குக் குறிப்பிடுகிறேன். 
              ஒரே குறளில் இரு குறுமொழிகள் வருவதுண்டு; ஒரே குறுமொழி இரு குறள்களில் வருவதுமுண்டு. குறுமொழி தராக் குறள்களுமுண்டு. 
            இன்று
முதல் நாடோறும் ஒன்றென, குறள் தரும் குறுமொழிகளைப் பகிர விழைகிறேன்.
Tuesday, 31 January 2017
பயில்வோர்ப் பட்டுண்டு உலகம்
கல்வியை விற்றுக் கறைக்காசு குவித்த குபேரர்கள்
                                        கூட்டமாய் அடைபடட்டும்
கற்கையில் களம்புகுந்து அறப் போராடியோர் 
                                   காலத்தே வெளிவரட்டும்
வித்தகம் உடையோர் விலைபோவாராயின் 
                        கொட்டடியில் அடைபடட்டும்
சுத்தமனத்தோர் சுயத்தொடு வினைபுரிந்தோர் 
                                வீதிதோறும் வெளிவரட்டும்
எத்தித் தின்போர் எதற்கும் துணிவோர் எளிதில் 
                                             வாராது அடைபடட்டும்
நித்தியச் சோற்றிற்கு நிரந்தரம் இல்லாதோரெலாம் 
                                                      நீதியுற வெளிவரட்டும்
கோடிகள் குவித்து கொட்டமடிப்போர் குறிவைத்தே 
                                             கூண்டொடு அடைபடட்டும்
வாடிவதையுறுவோர் வளமொடு வாழ வழிகாட்டுவோர் 
                    விரைந்து வெளிவரட்டும்
தவமென தாமே தனிவழி கண்டு மரபுரிமை முயல்வோர் 
  முற்றாய் வெளிவரட்டும்
பனியில் உறைந்து வெயிலில் உலர்ந்த அறப்போராளர் 
                                                              நலமே வெளிவரட்டும்
கள்ள நோக்குடன் கமுக்கச் சதிராடுவோர் கடையரென                                                        சடுதியில் அடைபடட்டும்
உள்ள சுத்தியொடு ஊருரிமைக்கு உழைக்கும் உத்தமர் 
                                                              உடனே வெளிவரட்டும்
 படித்தவர் பொதுவெளி புகுதலும் பண்பாடே யென்போர்
                                                                 பரந்து வெளிவரட்டும்
அடுத்தவர் வெற்றி அபகரிக்கத் துடிக்கும் அரசியல் நரிகள் 
                                                                  அன்றே அடைபடட்டும்
அறமொடு மறம் கரந்து அந்நியர் போற்றும் அறிவிலிகள் 
                                                       
அட்டியின்றி அடைபடட்டும்
தடியெடுத்தோர் எல்லாம் தண்டல்நாயகராய் எண்ணின் 
தவறாதே அடைபடட்டும்
தடியடியே தனக்குவப்பாய்ப் பயிரைமேய்ந்த வேலிகளும் 
                                            படிப்பினையாய் அடைபடட்டுமே!
Subscribe to:
Comments (Atom)
 
